மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.