மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் தொழிலாளியான ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகநாதனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.