மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி பகுதியில் அஸ்வின்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ஜோயல்(18) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ரெட்டியார்பட்டி நான்கு வழி சாலையில் சென்றபோது ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அஸ்வின் மற்றும் ஜோயல் ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.