Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. ஐ.டி நிறுவன ஊழியர் பலி…. புதுக்கோட்டையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு கும்பகோணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை வழியாக சென்று கொண்டிருந்த போது முகமது என்பவர் ஓட்டி வந்த கார் விக்னேஸ்வரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |