Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த ஓட்டுநர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியில் ராஜேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், சிவஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு  உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிள்-கார் மோதிய விபத்தில் டெம்போ டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |