மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுக்காம்பட்டியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் விராலிமலை-புதுக்கோட்டை சாலை பகவான்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வேன் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.