மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனிவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஏலாக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன் மற்றும் பழனிவேல் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.