மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பரிக்கல் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை பார்த்திபன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிடாகம் மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் பார்த்திபனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்திபனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.