மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் கடந்த மோட்டார் சைக்கிள் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இவர் குரும்பபாளையம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.