Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- பேருந்து மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான மாரிமுத்து என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அந்தேவனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் வளைவில் திரும்பிய போது பிரசாத்தின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து மோதிவிட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசாத் மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய தனியார் பேருந்து ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |