மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது மதுரை நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து பெருமாளின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெருமாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரான விக்ரம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.