Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பாலவேடு மேல்பட்டி தெருவில் துளசி(45) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது உறவினரான மோகன்ராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் தண்டுரை மேம்பாலம் மீது சென்றபோது பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துளசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மோகன்ராஜை வாகன ஓட்டிகள் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துளசியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |