மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அப்பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இவர் இடைகால் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தென்காசி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.