Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டருக்கு மாலை” காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு….!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை வாசலின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப பெற வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிள், சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை போட்டு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரத்தினம், துணைத்தலைவர் சண்முகராஜன், மாவட்ட தலைவி இமயமடோனா, கவுன்சிலர் சாந்தி, நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார், மகேஷ், வட்டார தலைவர் மதியழகன், நகர தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Categories

Tech |