Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-மினி பேருந்து மோதல்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவில் எலக்ட்ரீசியனான சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் சசிகுமார் தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் பித்தளைப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற மினி பேருந்து சசிகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சசிகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |