மோட்டார் சைக்கிள் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குறிப்பன்குளம் நடுத்தெருவில் விவசாயியான பால்துரை(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மாயமான்குறிச்சி விலக்கு அருகே சென்றபோது பால்துரையின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மினி வேனும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பால் துரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பால்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.