மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று சிவகாசி- திருத்தங்கல் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் பூமிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
மேலும் காயமடைந்த கௌரி சங்கர், சீனிவாசன், ராகுல், ராமமூர்த்தி, செல்வகணேஷ், விமல்ராஜ் ஆகிய 6 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூமிநாதன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.