இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்விஷாரம் பகுதியில் மசூர் அகமத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் முயிஸ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மசூர் அகமத் தனது மகன் முயிசுடன் மேல்விஷாரம் பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் திரும்பி வரும் வழியில் பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மசூர் முகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முயிசை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முயிஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு டவுன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.