Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. கடலூரில் பெரும் பரபரப்பு…!!!

பயங்கர விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே பச்சையாங்குப்பம் பகுதியில் சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் குள்ளஞ்சாவடி சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்‌. இந்நிலையில் கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 30 பயணிகள் இருந்தனர்.  இந்த பேருந்து பெரியகாட்டுசாகை பகுதிக்கு வந்த போது  திடீரென  டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து செந்தில்குமார் மற்றும் சபரிநாதன் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சபரிநாதன் மற்றும் செந்தில்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்குள்ள ஒரு மின் கம்பியின் மீது மோதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதைப்பார்தது அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கினர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமானது. இது தொடர்பாக குள்ளஞ்சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |