மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படிக்கும் சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருடன் சேர்ந்து இளையான்குடி-சிவகங்கை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சதீஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.