மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எரிவயலை கிராமத்தில் ராமகண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சேகர், பழனிவேலு ஆகியோருடன் சேர்ந்து வல்லடியார் கோவில் நடைபெற்ற திருவிழாவிற்கு சமையல் வேலைக்கு சென்றுவிட்டு எரியவயலை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ராமகண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகண்ணன்,சேகர் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
மேலும் காயமடைந்த பழனிவேலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமகண்ணன் மற்றும் சேகர் ஆகிய 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.