Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து …. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உருவாட்டி கிராமத்தில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்துப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி மதுரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து பாண்டியின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாண்டியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாண்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |