மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெரியப்பா கர்ணனுடன் சேர்ந்து மன்னார்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த கர்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.