மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதுடைய பசுபதீஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதிஸ்வரன் தனது நண்பர்களான தீபன் , கலையரசன், ராகவன் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள்கள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பசுபதீஸ்வரர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து தீபன், கலையரசன், ராகவன் ஆகிய 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தீபனும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரான செந்தில்குமரன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.