Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம் …. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிளக்கு கிராமத்தில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி மறவமங்கலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலை தடுமாறி முத்துசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மேலும் பேருந்தில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |