Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிராக்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய  விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடபாதிமங்கலம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  சுபபாரதி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சுபபாரதி தனது தோழி  ஜெனித்தாவுடன்  சேர்ந்து திருவாரூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி சுபபாரதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2  பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுபபாரதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும்  ஜெனித்தாவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |