Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்”… முதியவர் உயிரிழப்பு… போலீசார் விசாரணை…!!!

கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடுக்காகாட்டில் உள்ள ஏ.டி. காலனியில் வசித்து வந்தவர் 77 வயதுடைய ராமையா. ராமையாவும் அதே ஊரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வெட்டன் விடுதிக்கு சென்று கொண்டிருந்தார்கள். ராஜ்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்ட ராமையா பின் அமர்ந்திருந்தார்.

அவர்கள் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ராமையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ராஜ்குமாருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. இதனால் வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Categories

Tech |