மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிவன்ராஜ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று பட்டுக்கோட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த பேருந்து நிலைதடுமாறி சிவன்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிவன்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.