Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தந்தை-மகளுக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தரேவு பகுதியில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதுடைய சௌமியா என்ற மகளும், 7 வயதுடைய புகழ் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதால் முருகன் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக முருகன் தனது குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் நிலக்கோட்டை நோக்கி புறப்பட்டுள்ளார். இவர் வத்தலகுண்டு-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலைபுதூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் முருகனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் உயிருக்கு போராடி கொண்டிருந்த சௌமியா மற்றும் புகழ் ஆகிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சௌமியா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் புகழுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |