மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் திருநங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதியில் மோகன்ராஜ் என்கிற பிந்துமாதவி(27) வசித்து வந்துள்ளார். திருநங்கையான இவர் தர்மபுரியில் இருக்கும் பைபாஸ் சாலை அருகே திருநங்கைகளுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் பாடியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஒரு வாலிபருடன் பிந்துமாதவி மோட்டார்சைக்கிளில் பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிந்துமாதவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து காயமடைந்த 2 வாலிபர்களையும் வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிந்து மாதவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.