மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பூ வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவபாண்டலம் கிராமத்தில் பூ வியாபாரியான அமீர் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று வட சிறுவள்ளூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அமீர் பாஷா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அமீர் பாஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் கார் ஓட்டுநரான விக்னேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன