டிராக்டர் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜிபுரம் தந்தை பெரியார் சாலை பகுதியில் கூலி தொழிலாளியான உத்திரபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் காக்களூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் திடீரென உத்திரபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த உத்திரபதியை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உத்திரபதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.