Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்”…. பரிதாபமாக டிரைவர் உயிரிழப்பு….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த சிவபதி (டிரைவர்) என்பவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிவபதி திருவள்ளுவரை அடுத்திருக்கும் கோவிந்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சென்ற பொழுது வேகமாக வந்த மினிவேன் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மினி வேன் டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனிடையே சிவபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

 

Categories

Tech |