மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதீஸ்வரன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த 70 பேருடன் பொள்ளாச்சி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் திப்பம்பட்டியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் இரவு நேரத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் ஜோதீஸ்வரனும், ராஜசேகரனும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று உணவு சமைப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டு மீண்டும் திப்பம்பட்டிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜசேகரன் மற்றும் ஜோதீஸ்வரன் ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநரான கௌதம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.