மோட்டார் சைக்கிள் மீது மோரிய கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே இருக்கும் கலையனூரைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரின் மகன் நீதிராஜன் தனது தந்தை பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற 18ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் எதிர்பாரா விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த கருணாநிதி, ஸ்ரீதர் உள்ளிட்ட இரண்டு பேரும் படுகாயம் அடைந்தார்கள்.
இதில் நீதி ராஜன் மற்றும் காரில் பயணித்த பாலாஜி உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் வெங்கட்ராமன், பிரவீன் குமார், கார்த்திக் ராஜா, அர்ஜுனன் உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஆறு பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால் அர்ஜுனன் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. தற்பொழுது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.