மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரடிகுளம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். இவர் தனது நண்பரான சேனாதிபதியுடன் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கழுவந்தோண்டி பாலம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேனாதிபதி, மனோஜ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த போலீசார் தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.