புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் பணியை செய்து வரும் அவர் அப்பகுதியிலுள்ள கடை வீதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலையே பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.