Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…. இரண்டு துண்டாகிய தாயின் உடல்….தாய்-தந்தையை இழந்த பிள்ளைகள்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேற்கு செய்யூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்தார். கணவரை இழந்த லட்சுமிக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகன் தாயை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி லட்சுமியின் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே லட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.  இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |