Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல் …. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விருதுநகரில் கோர விபத்து ….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழசெல்லையாபுரம் கிராமத்தில்  லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் தனது  மோட்டார் சைக்கிளில் ஏழாயிரம் பணைக்கு  வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி ஆனந்தராஜியின்  மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஷை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ஆனந்தராஜ்யின் மனைவி ராஜலட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான கருப்பசாமி என்பவரை  கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |