மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற ஐ.டி .ஐ. முடித்த மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா வந்தவாசி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அலுமினிய சாமான்கள் ஏற்றி வந்த லாரி திடீரென சூர்யாவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.