மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ். பெயிண்டர் தொழிலாளியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரிய ரங்கம்பாளையத்திற்கு வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பெரிய ரங்கம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக ரமேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த விபத்து பற்றி ரமேஷ் அண்ணன் சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலாயுதம் பாளையம் போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.