நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஸ்கூட்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுச்சத்திரத்திம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் எதிர்பாராத விதமாக கணேசன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கணேசன் உயிரிழந்து விட்டார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த அன்பழகன் மற்றும் அவரது மனைவி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து விபத்தில் இறந்த கணேசனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.