மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுகவயல் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் ஓட்டி வந்த லாரி கருப்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பையாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.