மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை பலியான நிலையில், 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலியக்காவிளை பகுதியில் மீன் வியாபாரியான யகோவா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி(26) என்றால் மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யகோவா தனது மனைவி மற்றும் மகளுடன் கேரள மாநிலத்தில் உள்ள பாறசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காராளி பகுதியில் சென்ற போது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரித்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதனையடுத்து படுகாயமடைந்த யகோவா, அஸ்வினி, லாரி ஓட்டுநர் ஆகிய மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.