Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஆகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்காலிகமாக சுப்புலாபுரத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஊரில் வசித்த மகேந்திரன்(20) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் விடுமுறையில் மகேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷூம் மகேந்திரனும், மோட்டார் சைக்கிளில் செங்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது புளியங்குடி சாலையில் ரயில்வே கேட்டு அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆகாஷ், மகேந்திரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |