மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான அருண் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான ஆகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த லாரி அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அருண் குமார் மற்றும் ஆகாஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் ஆகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.