Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய அகரம் பகுதியில் வசந்த ராஜா(36) என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் மெக்கானிக்கான வசந்தராஜா மோட்டார்சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்று கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கியுள்ளார். பின்னர் வசந்த ராஜா மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் தீவனூர் மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வசந்தராஜா சம்பவ இடத்திலே பிரதானமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |