தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார் லெவல் 1 பயிற்சி முடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தன்னுடைய முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து டிக்டிக்டிக், திமிர்பிடித்தவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் பார்முலா ரேஸ் கார் பயிற்சியை முடித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: ” கார்களின் மீதான காதல் பள்ளிக்குச் சென்ற சிறு வயது முதலே எனக்கு இருந்தது. தான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது சொந்தக் காரர் ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்.
அப்போது எனக்கு ஸ்போர்ட்ஸ் காரை ஓட்ட வேண்டும் என்ற தீவிர ஆசை இருந்தது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. அரேபிய நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான்தான். இந்த காரில் மிக வேகமாக போகக்கூடிய இன்ஜின் இருப்பதை எனது தந்தை விரும்பவில்லை. ஆனால் நான் மிக நம்பிக்கையுடன் உறுதியுடன் இந்த காரை ஓட்டினேன். விரைவில் பெண்களுக்கான முறையான கார் பந்தயங்கள் நடைபெறும் என நம்புகிறேன். மேலும் மோட்டார் ஆண்களுக்கானது மட்டுமல்ல அது பெண்களுக்கும் தான் இன்று மிகப்பெரிய நம்பிக்கையை எனக்கு அளித்திருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.