Categories
டெக்னாலஜி பல்சுவை

மோட்டோரோலா நிறுவனத்தின் 12 ஜி.பி. ரேம் ஸ்மார்ட்போன்…!!!

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது…

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் வடிவமைப்பு கொண்டுள்ளதாகவும், இது பிப்ரவரி 23ஆம் தேதி இந்திய சந்தையில் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.

சிறப்பம்சம்:

இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. இதில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் உள்ளது. மேலும் 12 ஜி.பி. ரேம் இந்த ஸ்மார்ட்போனில் இருப்பதால் High Graphics கேம்ஸ்களை விளையாடலாம். எனவே இந்த ஸ்மார்ட்போன் விளையாட்டு பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு  நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை மோட்டோரோலா அனுப்பி வருவதாகவும், இந்த அழைப்பிதழில் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் எட்ஜ் என்ற வார்த்தையை குறிப்பிடும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image result for Motorola Edge Plus gameplay

Categories

Tech |