Categories
டெக்னாலஜி

மோட்டோ E சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்…. எப்போது தெரியுமா….? வெளியான சில தகவல்கள்….!!!

இந்திய சந்தையில் வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ E22s ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் புது மோட்டோ E22s ஸ்மார்ட்போன் விவரங்கள் மோட்டோரோலா இந்தியா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் மோட்டோ E22s மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் display, மீடியாடெக் ஹீலியோ ஜி37 processor, dual primary camera, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 mah battery வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக மோட்டோ E22s ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. 6.5 இன்ச் HD+ 720×1600 பிக்சல் IPS LCD display, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர் ஆண்ட்ராய்டு, 12 ஒஎஸ், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 16MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 8MP செல்பி கேமரா ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

Categories

Tech |